ஏஎம்.ரத்னத்தின் முதல்மகன் ஜோதிகிருஷ்ணா எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் ஊலலலா.இப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.ஏஎம்.ரத்னம் மகனுடைய விழா என்பதால் நிறைய இயக்குநர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.அனைவரும் மாறிமாறி ரத்னத்தையும் ஜோதிகிருஷ்ணாவையும் புகழவும் தயங்கவில்லை.இயக்குநர் கேஎஸ்.ரவிக்குமார் பேசும்போது,ஜோதிகிருஷ்ணா ரொம்ப ராசியானவர்,இவர் தொடுகிற கதாநாயகிகள் எல்லாம் உச்சத்துக்குப் போய்விடுவார்கள்.
உதாரணமாக ஸ்ரேயா,த்ரிஷா,தமன்னா,இலியானா ஆகியோரைக் கூறலாம் அவர்களைப்போல் இந்தப்பட நாயகி ப்ரீத்தி பண்டாரியும் புகழ்பெறுவார் என்று கூறினார்.விழாவுக்கு ரத்னத்தின் இரண்டாவது மகனும் நடிகருமான ரவிகிருஷ்ணா வரவில்லை.ஆனாலும் ரத்னம் பேசும்போது,என் வீட்டில் ஏற்கெனவே ஒரு ஹீரோ இருக்கிறார்,இப்போது இன்னொரு ஹீரோவும் சேர்ந்திருக்கிறார்.இவர்கள் இருவரும் வளருகிற நேரத்தில் சினிமாவுக்குள் கொண்டுவரவேண்டுமென நான் நினைத்ததே இல்லை.
அப்படி நினைத்திருந்தால் தொடக்கத்திலிருந்தே அதற்கான பயிற்சிகளைக் கொடுத்திருப்போம்.ஆனால் நான் எந்த முயற்சியுமே எடுக்காமல் இருவரும் தங்கள சொந்த முயற்சியில் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள்.அதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது என்றார்.மகன்கள் தந்தைக்கு ஆற்றிய உதவி.
|
|
| |
|