Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
   
Andhimazhai - headlines , tamil latest news
  விலைவாசி உயர்வைக் குறைக்க மு.க. கவிதை எழுதுவாரா?-விஜயகாந்த்   •  பாஜகவுடன் அதிமுக உறவு கூடாது: தா.பாண்டியன்   •  ப.சிதம்பரத்துக்கு பதிலாக - ரங்கராஜன்? - மிஸ்டர் நாரதர்   •  மீண்டும் அதிகாரப்பூர்வ மின்சாரத் தடை   •  திருகோணமலை துறைமுகத்தில் வான்புலிகள் தாக்குதல்   •  சிரஞ்சீவியின் 'பிரஜா ராஜ்ஜியம்'(மக்கள் அரசு)   •  தானாக திமுக பகைத்துக்கொள்ளாது; பரதனுக்கு மு.க. பதில்   •  தமிழகத்தின் தொழில் வளம் பாதிப்பு: ஜெ.   •  நடிகை ரம்பா தற்கொலை முயற்சியா?   •  1330 குறள்கள், திருவள்ளுவர் படத்துடன் பட்டுச் சேலை  
go to Home
Home | News | Blogs | கவிதை | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Andhimazhai - Tamil Profile login
E-mail :
Password :
 
Book Reviews
ஆவணம் இல்லையென்றால் ஆய்வு பறக்கும் - மாத்தளை சோமுவின் நூல் அறிமுகம்.
இலங்கையில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் புலம் பெயர்ந்த எழுத்தாளர் மாத்தளை சோமு, தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர்.ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு குறுநாவல், இரண்டு குட்டிக் கதைத் தொகுப்புகள், மூன்று பயண நூல்கள் எழுதியிருக்கும் இவரது சமீபத்திய கட்டுரைத் தொகுப்பு, 'வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்'. இந்நூலில் பழந்தமிழர் சிந்தனை, மண்ணியல், தாவரவியல், விண்ணியல், மருந்து, அணிகலன், இசை, நாடகம், எனப் பல்வேறு துறை சார்ந்த அறிவியல் கருத்துக்களை ஆராய்ந்திருக்கிறார்.
பண்டையத் தமிழர்கள் உணவு முறையைக் கூட மருத்துவ ரீதியில் அமைத்த்க் கொண்டதை,

" காலை இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்பவர்
கோலை வீசிக் குலாவி நடப்பாரே" எனும் பழந்தமிழ்ப் பாடல் வாயிலாக எடுத்துக் காட்டியுள்ளார்.

இன்றைய ஆங்கில மருத்துவமுறையில் பின்பற்றப்படும் நாடி பார்க்கும் முறை பழந்தமிழர்களிடையே " நாடிவைத்திய முறையாக" இருந்து வந்ததையும் குறிப்பிட்டுள்லார். தற்போது உலகத்தையே பயமுறுத்திவரும் ' பால் வினை நோய் ' பண்டைய காலத்திலேயே இருந்து வந்தது என்பதை," பட்ட மரம் போலாகும் மாந்தரால்
வந்த வெட்டை வன்மேகம்" எனும் பாடல் மூலம் நிறுவுகிறார்." வெட்டை வந்தால் கட்டையோடு போக வேண்டியதுதான் என்ற சொல் வடையையும் குறிப்பிடுகிறார்.

தற்போது வழக்கில் நிலவி வரும் சில பழமொழிகளில் கூட அறிவியல் கருத்துக்கள் மேலோங்கியிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார். எடுத்துக்காட்டாக 'நொறுங்கத் தின்றால் நூறு வயது'. 'உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு'என்பது பழமொழி "பண்டி' என்பது 'பெண்டீர்' என மருவி பெண்களுக்கு நல்லது எனும் தொணியில் 'உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கு அழகு ' என தவறாக வழங்கப்படுவதையும் குறிப்பிட்டுள்ளார். இப்படி'குடல் இறக்க நோய்' தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத்தான் வருகிறது.அதைத் தடுக்கவே ஆண்கள் இடுப்பில் அரைஞான் கயிறு கட்டும் பழக்கத்தை தமிழர்கள் ஏற்படுத்தினார்கள் என்கிறார்.இப்படி தமிழர்களிடம் நிலவி வரும் பல அறிவியல் கருத்துக்களை இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார் மாத்தளை சோமு.இப்படி பல பழமொழிகள் தவறாகப் மாறியிருப்பதைப் பட்டியலிட்டிருக்கிறார்.
'குடல் இறக்க நோய்' தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத்தான் வருகிறது.அதைத் தடுக்கவே ஆண்கள் இடுப்பில் அரைஞான் கட்டும் வழக்கத்தை தமிழர்கள் ஏற்படுத்தினார்கள் என்கிறார்.இப்படித் தமிழர்களிடையே நிலவி வரும் பல அறிவியல் கருத்துக்களை எடுத்துக்காட்டியுள்ளார் மாத்தளை சோமு.பழந்தமிழர்கள் ஒவியக் கலை, சிற்பக் கலை, கட்டிடக் கலை, சிற்பம் ஆடை, அணிகலன், ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினர் என்பதையும், இக்கலைகள் எல்லாம் நம் நாட்டிலிருந்துதான் மேலை நாடுகளுக்குப் பரவியது என்பதையும் இலக்கியத் தரவுகளின் மூலம் நிறுவியிருக்கிறார்.
இன்றையத் தமிழன் இத்தகைய நம் செல்வங்களின் மீதும், சிந்தனைகளின் மீதும், மதிப்பிழந்து மேல்நாட்டு மோகத்தில் மூழ்கியிருப்பதை பல இடங்களில் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.
அயல் மொழிக் கல்விமுறையினால் தாய்மொழி மட்டுமல்லாமல் இன்றையத் தமிழர்கள் தாய்மண் சார்ந்த பலவற்றையும் இழந்து வருவதை இயலாமையுடன் ஏக்கத்துடன் கூறிச் செல்கிறார்." எல்லாவற்றையும் ஆங்கிலவழியில் சிந்திப்பது ஒரு மனிதன் கோமணத்தை இழந்ததற்குச் சமானம்.கோவணம் போனால் மானம் பறக்கும். ஆவணம் இல்லையென்றால் ஆய்வு பறக்கும்" என்று ஆவேசப்படுகிறார் மாத்தளை சோமு.
' வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்' எனும் இந்நூல் அறிந்திராத பல தகவல்களின் மூலம் வாசகனை வியப்பிலாழ்த்துகிறது

- மு. யாழினிவசந்தி

வியக்க வைக்கும் தமிழர் அறிவியல் - ஆசிரியர் மாத்தளை சோமு, பக்.296,
வெளியீடு உதகம் (உலகத் தமிழாய்வுக் கழகம்) ( பழைய எண் பி - 5) புதிய எண் பி - 15: ஐந்தாவது முதன்மை சாலை இராமலிங்க நகர், உறையூர், திருச்சி- 620003
 Book Reviews
ஆவணம் இல்லையென்றால் ஆய்வு பறக்கும் - மாத்தளை சோமுவின் நூல் அறிமுகம்.
 
Home | News | Blogs | கவிதைகள் | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Copyright © Andhimazhai.com . All rights reserved
disclaimer | advertise with us | contact