Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
   
Andhimazhai - headlines , tamil latest news
  10 நாள்களுக்கு முன்பே ஜெ.ஆர்ப்பாட்டம்   •  இட ஒதுக்கீடு - இருப்பதும் போய்விடக்கூடாது: மு.க.   •  கோவை - திமுகவும் பதிலடி கூட்டம்   •  தலைமைத்தேர்தல் ஆணையரானார் குரேஷி   •  ஆலடி அருணா கொலை - ராஜா விடுதலை   •  தி.மு.க வின் மவுனம்...- மிஸ்டர் நாரதர்...   •  தமிழகத்தில் மதுவிலக்கு - அரசு பரிசீலனை   •  மீண்டும் 87 போல போராட்டம் - ராமதாசு   •  ஆக.15 - 30வரை சாதனை விளக்க திமுக இளைஞர் அணி தீர்மானம்   •  டான்சி வழக்கு நீதிபதி மறைவு  
go to Home
Home | News | Blogs | கவிதை | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Andhimazhai - Tamil Profile login
E-mail :
Password :
 
Tit Bits
  இலக்கியத் துளிகள்
  * கருஞ்சட்டத் தமிழர் என்ற சிற்றிதழைக் கொண்டு வருகிறார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

* கவிஞர்கள் அழகுநிலா, பரமேஸ்வரி, சுகிர்தராணி, இளம்பிறை, அ.வெண்ணிலா ஆகியோர் பள்ளி ஆசிரியர்கள்.

* பத்திரிக்கையாளர் லெனின் கலைஞரிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்நூலில் இளம் வயது கலைஞர், தற்போதைய கலைஞர் தன்னைப் பற்றி சொல்லிக்கொள்வதுபோல எழுதியுள்ளார்.

* கி.ராஜநாராயணனின் கதைசொல்லி காலாண்டிதழ் இப்போது உயர்தர தாளில் அச்சாகி வெளிவருகிறது. வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதிப்பாளராக சிறப்பாக வெளியிடுகிறார்.

* சென்னையில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஆர்ட் கேலரிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன.
 
  இலக்கியத் துளிகள்:
  *கவிஞர் ரவிசுப்ரமணியன் முதுபெரும் எழுத்தாளர் மா.அரங்கநாதன் பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்து இயக்கியுள்ளார். சிறுகதை எழுத்தாளராக அதிகம் அறியப்பட்ட அவர், இந்தப் படத்தில் கவிதைகள் குறித்து தீவிரமான விவாதங்களை முன்வைக்கிறார்.

*அடுத்த கவிதைத் தொகுப்பை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் கவிஞரும் இயக்குனருமான ராஜாசந்திரசேகர்.

*சின்னத்திரையில் நடித்துவந்த பொன்வண்ணன் ஓர் ஓவியர் என்பது பலரும் அறியாதது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது ‘ஆனந்த விகடன்’ இதழில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தொடருக்கு ஓவியம் வரைந்துவருகிறார்.

*தமிழக இளம் நவீன ஓவியர்களில் சிலர் ஆர்ட் கேலரிகளின் உதவியோடு சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார்கள்.

*கவிஞரும் டாக்டருமான வசந்த் செந்தில் ‘குமுதம்’ ஹெல்த் இதழின் கன்சல்டன்ட் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார்.

*இவரது சமூகம், அரசியல். வரலாறு தொடர்பான புத்தகங்களையே வெளியிட்டு வந்த கிழக்குப் பதிப்பகம் கவிதைப் புத்தகங்களை வெளியிடவுள்ளார்கள்.

*கருப்பு வெள்ளையில் வந்துகொண்டிருந்த ‘புதிய பார்வை’ பத்திரிகை இப்போது முழுவம் வண்ணங்களில் வெளிவரத் தொடங்கியிருக்கிறது.

*சமீபத்தில் கோயம்புத்தூர் நகரில் நடந்த புத்தகக் கண்காட்சியில் அவ்வளவாக கூட்டம் வரவில்லை. நூல்களும் சரியாக விற்பனையில்லை என்கிற வருத்தத்தில் இருக்கிறார்கள் பதிப்பாளர்கள்.
 
  இலக்கியத்துளிகள்
  • எழுத்தாளர் மா. அரங்கநாதன் பற்றிய டாக்குமெண்டரி படம் ஒன்றை எடுத்து வருகிறார் கவிஞர் ரவிசுப்ரமணியம்.



• கர்நாடக இசைப்பாடகர் சஞ்சய் சுப்ரமணியம் குறித்த டாகுமெண்டரி படத்தை எடுத்துள்ளார் பிரசன்னா ராமசாமி. இப்படத்தின் வெளியீட்டு விழா கடந்த 15.11.06 அன்று சென்னை மியூசிக் அகாதெமியில் நடந்தது.



• கவிஞர் கனிமொழியின் கவிதைகளுக்கு இசை சேர்த்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.



• கிழக்கு பதிப்பாளர்கள் பத்ரி சேஷாத்ரி, சக்தி நாராயண் ஆகியோர் ப்ராங்பர்ட் உலகப் புத்தகத் திருவிழாவிற்குச் சென்று வந்துள்ளார்கள். "நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பதிப்பாளர்கள் தமிழில் நூல்களை வெளியிட ஆர்வம் கொண்டுள்ளார்கள். ஆனால் யாரை அணுகுவது என்று வழி தெரியாமல் இருக்கிறார்கள். நம் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்து மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்த சந்தையை கண்டறிந்து வந்திருக்கிறோம்" என்கிறார்கள்.



• தேசத்தின் குரல் என்ற பகுதிக்காக மறைந்த எழத்தாளர் வல்லிக்கண்

ணன் 12 மணி நேர மிக நீண்ட பேட்டியொன்றை அகில இந்திய வானொலிக்காக எடுத்துத் தந்திருக்கிறார் ரவிசுப்ரமணியன்.



• கருத்து அமைப்பின் மரண தண்டனைக்கு எதிரான கூட்டம் வரும் 29 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.
 
  கொறிக்க-1
  * வல்லிக்கண்ணன் தற்போது தனது 86 வது வயதிலும் என் வரலாற்றுச் சுவடுகள் என்ற சுயசரிதையை இந்த நூற்றாண்டு வரலாற்றுடன் சேர்த்து எழுதிக்கொண்டிருக்கிறார்.தினமும் 5 பக்கங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்.

* பதிப்புச்செம்மல் மா.சு.சம்பந்தம் தான் முதலில் ஸ்ரீ, ஸ்ரீமதி என்று போடும் பழக்கத்தை மாற்றி திரு,திருமதி என்று போடும் பழக்கத்தை கொண்டு வந்தார்.

* மொழிபெயர்ப்பாளராகவே பெரிதும் அறியப்பட்ட மாஜினி அம்பேத்கர் பேருரைகள் என்ற அம்பேத்கரின் உரைகளை மொழி பெயர்த்து நூல் வெளியிடும் பணிக்குழு வின் தலைவராக இருக்கிறார்.

* சிட்டிக்கு வயது 96 ஆகிறது எனினும் இன்னும் எழுதிக்கொண்டும் படித்துக் கொண்டும் தான் உள்ளார்.

* தி.க.சி. யும் ,அவரது உற்ற நண்பர் வல்லிகண்ணனும் நூற்றுக்கணக்காண கடிதங்களை தொடர்ந்து அவர்களின் வாசகர்களுக்கும் மற்றும் இலக்கியத்துறையில் உள்ளவர்களுக்கும் தினமும் எழுதிக்கொண்டே உள்ளனர்.
 
  கொறிக்க-2
  * தொல்லியலாளர் ஐராவதம் மகாதேவன் சமீபத்திய கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையான தமிழ்கல்வெட்டுகள் என்ற நூலை கொண்டு வந்துள்ளார்.வெளியீடு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்.


* கவிஞர் ஞானக்கூத்தன் திருவல்லிகேணியில் புது வீடு பார்த்துகுடியேறியிருக்கிறார்.இவரது மகன் திவாகர் காலச்சுவடு பத்திரிக்கையில் பணியாற்றுகிறார்.


* கூத்துபட்டறை முத்துசாமியின் மகன் நடேஷ் ஓவியராக இருக்கிறார்


* கோணங்கி, தமிழ்செல்வன்,முருகபூபதி மூவரும் சகோதர்கள்.மதுரகவி பாஸ்கரதாஸ் இவர்களின் தாத்தா.இவர்களின் தந்தையும் எழுத்தாளர்தான்


* கவிஞர் மீராவின் மறைவுக்கு பிறகு அவரது மகன் கதிர் 'அன்னம்' பதிப்பகத்தை நடத்துகிறார்.


* சா.கந்தசமியும், டி.ஆர்.பாலுவும் சம்பந்திகள்.


* வண்ண நிலவன் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.மாப்பிள்ளை கோவைக்காரர் ,இஞ்சினியர்.


* தொண்ணூறு வயதைத் தாண்டி விட்டாலும் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார் லா.ச.ராமாமிருதம்.


* கவிஞர் முத்துக்குமரர் பி.எச்.டி செய்கிறார்.வீட்டில் பெண் பார்க்கிறார்கள்.


* மும்பையில் வேலை பார்த்து கொண்டிருந்த நாஞ்சில் நாடன் கோவைக்கு வந்து விட்டார்.


* ஊர் ஊராக போய் மரம் நடுகிறார் கவிஞர் பிரம்ம ராஜன்.


* திரைப்பட தணிக்கை குழுவில் எழுத்தாளர் பொன்னீலன் இடம் பெற்றுள்ளார்.


* அஸ்வகோஷ் என்ற பெயரிலும் எழுதுவார் எழுத்தாளர் ராசேந்திரசோழன்.


* எஸ். ராமகிருஷ்ணன் தீவிரமான Bலொக்கிங் இல் ஈடுபடுகிறார்.அட்சரம் என்பது அதன் பெயர்.


* கவிஞர் சல்மா முக்காடு போடாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க விரும்புவதில்லை.


* எழுத்தாளர் சுஜாதா மயிலாப்பூரில் புது பிளாட் வாங்கியிருக்கிறார்.கூடவே புதிய கறுப்பு காரும் வாங்கியுள்ளார்.


* திருநெல்வேலியில் மிளகாய் வற்றல் மண்டி வைத்திருக்கும் எழுத்தாளர் யார்? தோப்பில் முகமது மீரான்.


* வாசந்தி சென்னை வீட்டை காலி செய்துவிட்டு பெங்களுரில் குடியேறிவிட்டார்.


* கவிஞர் வசந்த் செந்தில் ஒரு மருத்துவர்.


* கல்வியாளர் வசந்திதேவியின் கணவர் கே.எஸ்.சுப்பிரமணியன் ஆசியன் வங்கியின் முன்னாள் மேலாளர்.


* குமுதம் ப்ரியா கல்யாணராமனின் ஒரிஜினல் பெயர் பிரகாஷ்.


* கிருஷ்ணா டாவின்ஸியின் இயற்பெயர் வெங்கட்ரமணன்.


* குளிர் கண்ணாடி இல்லாமல் படம் எடுக்க அனுமதிக்க மாட்டார் லேனா தமிழ்வாணன்.
 
  கொறிக்க -3
  *ஜெயமோகன் கஸ்தூரிமான் என்ற மலையாளப்படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு வசனம் எழுதுகிறார்.

* அசோகமித்திரன் எழுத ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகின்றன.

* ஓவியர் ஆதிமூலத்தின் மகன் அபராஜிதனும் ஓவியராக உள்ளார்.

* பிரபஞ்சனின் குடும்பம் பாண்டிச்சேரியில் உள்ளது.இருந்தாலும் பாதிநாட்கள் சென்னையில் கழிக்கிறார்.இவரதுமகன் ஒரு ஓவியர்.

* கவிஞர் பழமலய் ஒரு கல்லூரியின் பேராசிரியர்.

* ஓவியர் ஆர்.பி.பாஸ்கரன் லலித்கலா அகாடமியின் தலைவராக உள்ளார்.இப்பதவிக்கு வந்த முதல் தமிழர் இவர்.

* சிட்டி உயிரோடிருக்கும் மூத்த மணிக்கொடி எழுத்தாளர்.சென்னை அடையாரில் உள்ள மகள் வீட்டில் வசிக்கிறார்.

* எழுத்தாளர் திலீப்குமார் புத்தகக்கடை நடத்துகிறார்.குஜராத்தியான இவர் பள்ளிபடிப்பைகூட படிக்கவில்லை.

* எழுத்தாளர் கோ.தர்மன், எழுத்தாளர் பூமணியின் அக்கா மகன்.

* ஈரோடு தமிழன்பனின் மகன், மகள் இருவருமே மருத்துவர்கள்.

* கவிஞர் மனுஷ்யபுத்திரனின் சித்தப்பா மகள் கவிஞர் சல்மா.

* போலந்து பல்கலைக் கழகத்தில் இருந்து ஓய்வு பெற்று,இந்திரா பார்த்தசாரதி சென்னை ஆழ்வார்பேட்டை மகள் வீட்டில் உள்ளார்.
 
   
 Recent Stories
எந்தன் அழகி
உள்ளத்தை உணர்ந்துக்கொள்
கபரஸ்தான் கதவு!
மரணம்
சுத்தம்!
என் பெயர் ஒளரங்கசீப்!
ÐñÎ À¢Š¸ð!
±ð¦¼ØòÐ ÓŠ¾À¡Å¢ý †ˆ À½õ!
நீளக்கூந்தல்காரியின் அழகானச் செருப்பு
¯ûÇ¢ÕóÐ §¸ðÌõ ÌÃø!
 Top Rated Stories
சிவப்பாய் ஓர் ஞானம்
நட்புத் தேவதையே...
நவரத்தின மோதிரம்
உயிர்வலி!
மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே!
தாத்தா
நிகழ்வுகள்
நங்கூரம்
ஆசானுக்கு பாடம்
மரணத்திற்கு பின்னாலொரு ஞாயிற்றுக்கிழமை
 
Home | News | Blogs | கவிதைகள் | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Copyright © Andhimazhai.com . All rights reserved
disclaimer | advertise with us | contact