Staff Writer
விஜய் டிவியின் புகழ்பெற்ற தொகுப்பாளினியான பிர்யங்கா தேஷ்பாண்டேவின் இரண்டாம் திருமணம் எளிமையாக நடைபெற்றது. இசைத்துறையிலும் நிகழ்ச்சி வடிவமைப்புத்துறையிலும் இயங்கிவரும் தொழிலதிபரான வசி சாச்சி என்பவருடன் இத்திருமணம் நடந்தேறி உள்ளது.
பிரியங்காவின் பூர்வீக குடும்பம் மராட்டிய மாநிலத்தவராக இருந்தாலும் தமிழ்ப் பெண்ணாகவே மாறிவிட்டவர். அவரது திறமைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். வசி சாச்சியை நிகழ்ச்சி ஒன்றி சந்தித்து, இருவரும் காதல் வயப்பட்டு திருமணத்தில் முடிந்துள்ளது.
இது பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம். முதல் திருமணம் 2016-இல் நடைபெற்றது.
தன் திருமணப் படங்களை Life update: Going to be chasing sunsets with this one. என்ற வாசகங்களுடன் சமூக ஊடகத்தில் வெளியிட்டார் பிரியங்கா. இதையடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.