உண்மை சம்பவத்தை தழுவி உருவாகும் கூடு திரைப்படம்!

உண்மை சம்பவத்தை தழுவி உருவாகும் கூடு திரைப்படம்!

ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் “கூடு" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஒரு கிராமத்தில் உள்ள மின்சாரப் பெட்டியில் குருவி கூடு கட்டி, குஞ்சு பொரித்துப் பறக்கும் வரை மின்சாரம் இல்லாமல் வாழ்ந்த கிராம மக்களின் நெகிழ்ச்சி சம்பவத்தை தழுவி தயாராகும் திரைப்படம் தான் கூடு. இந்தப் படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்குகிறார். கதை திரைக்கதையை டேவிட் வில்லியம்ஸ் எழுத, கணேஷ் மற்றும் கண்ணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர்களின் முகங்கள் எதுவுமின்றி 'கூடு’ என்ற டைட்டில் மட்டும் வித்தியாசமாக இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com