மலேசிய பிரதமர் அன்வார்- ரஜினி
சினிமா செய்திகள்
மலேசிய பிரதமர் வேடத்தில் நடிக்கிறாரா ரஜினி?- அன்வார் இப்ராகிமுடன் சந்திப்பு!
மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிமை, நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார். அந்நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் ரஜினியை அன்வார் இப்ராகிம் உற்சாகத்தோடு வரவேற்றார். அப்போது ரஜினி நடித்த சிவாஜி உட்பட்ட படங்களின் காட்சியைப் போல, அன்வார் செய்துகாட்டி அசத்தினார்.
வழக்கத்துக்கு மாறாக ரஜினி இந்தச் சந்திப்பில் வெள்ளை நிற வேட்டியுடன் காணப்பட்டார்.

மலேசிய பிரதமர் அன்வார்- ரஜினி
இச்சந்திப்பு குறித்து அன்வார் இப்ராகிம்தன் டிவிட்டர் பக்கத்தில், ரஜினியின் அடுத்த படங்களில் தன்னுடைய போராட்டங்களை சேர்த்துக்கொள்வது தொடர்பாகப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்பு படங்களையும் மலேசிய பிரதமர் வெளியிட்டுள்ளார்.
ரஜினி அடுத்தடுத்த இரண்டு படங்களில் நடிக்கவுள்ள நிலையில், மலேசிய பிரதமரின் கதையாக எந்தப் படம் இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.