கேக் வெட்டும் இயக்குநர் ஷங்கர்
கேக் வெட்டும் இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் 30: கேக்வெட்டி கொண்டாட்டம்!

1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். அவரது, முதல் படமான ஜென்டில் மேன் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்வில் அவரது உதவி இயக்குநர்களும் இருந்துள்ளனர். இந்த கொண்டாட்டம் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு இயக்குநர் ஷங்கரின் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இயக்குநர் ஷங்கர் இதுவரை மொத்தம் 12 படங்களை இயக்கியிருக்கிறார். ஒவ்வொரு படமும் தனித்துவமானவை. ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டத்தையே விருந்தாக கொடுப்பவர்.  ரஜினி, கமல், விஜய், விக்ரம், அர்ஜூன், பிரசாந்த், சித்தார்த், பிரபுதேவா என பலர் இவரது இயக்கத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் வரலாற்றில் சினிமாவை தொழில் நுட்பரீதியாக நவீனப்படுத்தியதற்கும் அதன் வணிகத்தை பெரிதாக்கியதற்கு ஷங்கரின் பங்கு மிகப்பெரிது.

தற்போது அவரின் இயக்கத்தில் இந்தியன் -2, கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்கள் தயாராகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com