பிரபல மலையாள இயக்குநருடன் இணையும் பிரபுதேவா!

பிரபல மலையாள இயக்குநருடன் இணையும் பிரபுதேவா!
Published on

மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் பேட்ட ராப் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகும் திரைப்படம் பேட்ட ராப். பரபரப்புக்கும் கலகலப்புக்கும் பஞ்சமில்லாத திரைப்படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஜூன் 15, 2023 அன்று புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்படத்தில் வேதிகா நாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் ஷாஜோன், மைம் கோபி மற்றும் ரியாஸ் கான் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்திற்கு இமான் இசையமைக்க, ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பாளராக சான் லோகேஷ் மற்றும் கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் பணியாற்றுகின்றனர்.

படத்தின் இயக்குநர் எஸ் ஜே சினு இதற்கு முன்னதாகதேரு. ஜிபூட்டி போன்ற மலையாளப் படங்களை இயக்கியவர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com