தொகுப்பாளருக்கு மாலை போட்ட கூல் சுரேஷ்
தொகுப்பாளருக்கு மாலை போட்ட கூல் சுரேஷ்Office

தொகுப்பாளரிடம் அநாகரிகம்: கோபப்பட வைத்த கூல் சுரேஷ்!

மேடையில் தொகுப்பாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட கூல் சுரேஷை பத்திரிகையாளர்கள் மன்னிப்புக் கேட்க வைத்தனர்.

நடிகர் மன்சூர் அலிகான் நடித்துள்ள ‘சரக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு பாக்கியராஜ், கூல் சுரேஷ், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, மேடையில் பேச வந்த கூல் சுரேஷ்,“எனக்கெல்லாம் மாலை போட்டீங்க… ஆனால் இதுவரை பலரை வரவேற்று நிகழ்ச்சியைக் கலகலப்பாக மாற்றிய இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளருக்கு நீங்கள் மாலை போடவில்லையே…” என தனது கையிலிருந்த பெரிய மாலையை சட்டென்று தொகுப்பாளினிக்குப் போட்டார். அதிர்ச்சி அடைந்த தொகுப்பாளினி வேகமாக மாலையைக் கழட்டிவிட்டார்.

பிறகு, மன்சூர் அலிகான் பேசும்போது, ”கூல் சுரேஷ் செய்தது தவறு அவரை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்” என கீழே இருந்த பத்திரிகையாளர் ஒருவர் கூறினார். “சுரேஷ் அப்படிச் செய்திருக்கக் கூடாது. இந்த தப்புக்கு நானும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டார்.

மீண்டும் மேடைக்கு வந்து கூல் சுரேஷ், “நான் வேண்டுமென்று செய்யவில்லை. வந்ததிலிருந்து நாங்கள் இருவரும் நகைச்சுவையாகத்தான் பேசிக்கொண்டு இருந்தோம். இதை நான் நகைச்சுவையாகத்தான் செய்தேன். நான் இப்படிச் செய்தது மிகவும் தவறு. பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com