அண்ணாமலை பெயர் அழிப்பு, பா.ஜ.க. புதிய தலைவர் நயினார்!

அண்ணாமலை பெயர் அழிப்பு, பா.ஜ.க. புதிய தலைவர் நயினார்!
Published on

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவரின் பெயர் தனியாக ஒரு பெயர்ப்பலகை இருக்கும். அதில் தற்போதைய தலைவர் அண்ணாமலையின் பெயர் பதிப்பிக்கப்பட்டிருந்தது. 

இன்று புதிய தலைவருக்கான வேட்பு மனுத் தாக்கலின்போது சட்டப்பேரவை பா.ஜ.க. குழுவின் தலைவர் நயினார் நாகேந்திரன், பிற்பகல் 2 மணியளவில் மனுத்தாக்கல் செய்தார். 

முன்னதாகவே, கட்சி அலுவலகத்துக்கு வந்த அவர் கமலாலயத்தின் நுழைவாயிலில் தரையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு உள்ளே சென்றார். 

மாலை நான்கு மணிவரை மனுத்தாக்கல் செய்யலாம் எனும் நிலையில் 4 மணிவரை வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. 

நயினார் மனு தாக்கல் செய்ததற்கு அண்ணாமலை, எல்.முருகன்,  பொன்.இராதாகிருஷ்ணன், எச்.இராஜா, வானதி சீனிவாசன் உட்பட பத்து பொதுக் குழு உறுப்பினர்கள் பரிந்துரைசெய்தனர். 

இதன்மூலம், அண்ணாமலையோ எச்.இராஜாவோ பழைய தலைவர்களோ வானதியோ தலைவர் பதவிக்குப் போட்டியில்லை என உறுதியாகிவிட்டது. 

இந்த நிலையில் புதிய தலைவர் பதவி குறித்த முடிவு நாளை மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com