அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்!

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்!
Published on

அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் குணசேகரன் இன்று காலமானார். 

உடல்நிலை சரியில்லாமல் கோவை மருத்துவமனையில் சில நாள்களாக சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.

மறைந்த குணசேகரன் அக்கட்சியின் ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளராகப் பதவி வகித்துவந்தார்.

அவரின் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com