அந்த ’சார்’கள் வெட்கித் தலைகுனியட்டும்- மு.க.ஸ்டாலின்

அந்த ’சார்’கள் வெட்கித் தலைகுனியட்டும்- மு.க.ஸ்டாலின்
DELL
Published on

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒன்பது குற்றவாளிகளுக்கும் கோவை நீதிமன்றம் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்று அனைத்து மக்கள் உரிமை அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கருத்து கூறிவருகின்றன.  

முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பக்கங்களில் இதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.  

”பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால்

நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது!

அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க

முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதில், ‘சார்’ என ஸ்டாலின் மேற்கோளிட்டுக் குறிப்பிட்டிருப்பது, சூட்டைக் கிளப்பியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்பட்டதன் பின்னணியில் பிடிபட்ட குற்றவாளி யாரையோ சார் எனச் சொன்னதைப் பிடித்துக்கொண்டு, அ.தி.மு.க., பா.ஜ.க. உட்பட்ட எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியைத் தொடர்ந்து கிண்டலாக விமர்சித்துவந்தன. இப்போது அவரே அந்த சொல்லைப் பயன்படுத்தி அ.தி.மு.க.வைச் சீண்டியிருப்பதாகக் கருதப்படுகிறது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com