செய்திகள்
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் இராமதாசை ஆடிட்டர் குருமூர்த்தி இன்று காலையில் திடீரென சந்தித்தார். சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் உடனிருந்தார்.
இந்தச் சந்திப்பு 3 மணி நேரம் நீடித்தது. சற்றுமுன்னர் வெளியே வந்த குருமூர்த்தி, தன் நீண்ட கால நண்பர் இராமதாஸ் என்றும் அவரை நட்புரீதியாக சந்தித்ததாகவும் அவர் கூறினார்.
பா.ஜ.க.வுக்காக இராமதாசைச் சந்தித்த தான் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
அன்புமணி விவகாரத்தில் சமாதானம் பேசவந்தது பற்றிக் கேட்டதற்கு, அவர் தைலாபுரம் வந்ததே தனக்குத் தெரியாது என்று குருமூர்த்தி கூறினார்.
பிரச்னைகள் இருக்கும் இடத்தில் எல்லாம் ஆடிட்டர் இருக்கிறாரே எனக் கேட்டதற்கு, தான் இருக்கும் இடத்தில் பிரச்னையும் இருக்கிறது என்று அவர் சிரித்தபடி பதில்கூறினார்.