அமைச்சர் நேரு மீது தி.மு.க. எம்.எல்.ஏ. பகிரங்க அதிருப்தி!

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி
ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி
Published on

திருச்சி மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக் கூட்டம் இன்று காலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில், மக்களவை உறுப்பினர்கள் ஜோதிமணி, துரைவைகோ, பழனியாண்டி உட்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆட்சியர் பிரதீப்குமார் முதலிய பலரும் கலந்துகொண்டனர். 

இதில், திருவரங்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி பேசுகையில், தன் தொகுதிக்கு உட்பட்ட கண்ணுடையான்பட்டி, சமுத்திர பாலத் திட்டங்களுக்கு ஒப்புதல் வாங்கிவிட்டதாகவும் அதை மாவட்ட திட்ட அலுவலர் நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும் என்றும் இது மக்களின் வாழ்வாதாரத்துக்கான பாலம் என்றும் கூறினார். 

இந்த இரண்டு பாலங்களையும் மாற்றிவிட வேண்டாம்; சமுத்திரம் பாலத்தை மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு மாற்றியதில் எனக்கு அமைச்சர் நேரு மீது வருத்தம் வந்தது என்றும் அவர் குறிபிட்டார். 

அந்தந்தத் தொகுதிக்கு என்ன உள்ளதோ அதை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும்; அடுத்தவர் சாப்பாட்டை எடுத்து நாம் சாப்பிடுவது தப்பு; அதேமாதிரி எனக்கு ஒதுக்கியதை மாற்றிவிடக்கூடாது; (திருச்சி) மக்களவைத் தொகுதி உறுப்பினருக்கு (துரை வைகோ) அதிக வாக்குகள் கிடைத்த பகுதி மணப்பாறை பஞ்சாயத்துதான்; அவரும் இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி பேசினார். 

தன்னைக் குறிப்பிட்டுப் பேசியதும் உடனடியாக மைக்கைத் தனக்கு அருகில் இழுத்து பேசமுயன்று துரை, ஏனோ விட்டுவிட்டு பழனியாண்டியைப் பேசுமாறு கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com