கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த எஸ்.டி.பி.ஐ. கட்சி திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டது. மிகக் குறைவான வாக்குகள் பெற்று மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தத்திடம் தோற்றுப்போனார்.
இந்தப் பின்னணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள், இன்று முற்பகலில் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத்திருத்தத்தை தி.மு.க. எதிர்த்து நின்றதற்காக ஸ்டாலினிடம் நன்றி தெரிவித்தோம் என்று கூறினார்.
இன்றுவரை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்துவரும் எஸ்.டி.பி.ஐ. கட்சி, திடீரென எதிரணித் தலைமையான தி.மு.க. தலைமையகத்துக்கு வந்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.