இயல்புக்கு வரும் காஷ்மீர்... ஸ்ரீநகரில் விமான சேவை தொடங்கியது!

இயல்புக்கு வரும் காஷ்மீர்... ஸ்ரீநகரில் விமான சேவை தொடங்கியது!
Published on

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆயுதச் சண்டை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், காஷ்மீரில் இன்றுமுதல் மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. 

புதுதில்லியிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஸ்ரீநகர் விமானநிலையத்தில் இன்று மதியம் 12.49 மணிக்கு சென்று சேர்ந்தது. 

விமான நிலைய அதிகாரி ஒருவர் ஜம்மு காஷ்மீர் செய்தி முகமையிடம் இத்தகவலைத் தெரிவித்தார். 

முன்னதாக, பெகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும்வகையில் பாகிஸ்தானில் உள்ள பல நிலைகள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. அதையடுத்து நாடு முழுவதும் ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. 

ஸ்ரீநகர் உட்பட 32 விமான நிலையங்களில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இங்கெல்லாம் விரைவில் விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என இன்று காலையில் விமானநிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  

விமான சேவை சீரானால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்குப் படையெடுப்பார்கள் என்பதால், அங்குள்ள வியாபாரிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com