செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, கட்டணமில்லாத தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசை 3 கி.மீ. தொலைவுக்குக் காத்திருக்கின்றனர்.
நேற்று ஒரு நாள் மட்டும் 88 ஆயிரத்து 257 பேர் சாமியை வழிபட்டனர்.
காணிக்கையாக பக்தர்களிடமிருந்து 3.68 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று கோயில் நிருவாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள 31 அறைகளும் முழுவதுமாக நிரம்பிவிட்டன. இதனால் சாமியைத் தரிசிக்க மூன்று கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நிற்கின்றனர்.