செய்திகள்
தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாகப் பிரச்னை எழுந்துள்ளது. இந்நிலையில், கோவையில் பொறியியல் முதுநிலைப் பட்டம் படித்துக்கொண்டே வரும் 23 வயதுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை இழைக்கப்பட்டதாகப் புகார் தரப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை, காரமடை அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியின் தலைமைச் செயலதிகாரி பிரசன்னா என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார்.
அவரைத் தேட காவல்துறையினர் குழு அமைக்கப்பட்டுள்ளது.