கீழடி- மத்திய அமைச்சர் சொன்ன பதில்!

கஜேந்திர சிங் செகாவத்
கஜேந்திர சிங் செகாவத்
Published on

கீழடி தொல்லியல் ஆய்வு முடிவை இன்னும் வெளியிடாமல் மைய அரசு கிடப்பில் போட்டுள்ளது என்று தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு நீடித்துவருகிறது. 

மதுரைக்கு வந்து சர்ச்சையாகப் பேசிச் சென்ற மைய அமைச்சர் அமித்ஷா, கீழடியைப் பற்றி முதலில் பேசவேண்டும் என முன்னாள் மைய அமைச்சர் ஆ.இராசா நேற்று பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மைய பண்பாட்டுத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், பா.ஜ.க. மாநில அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது, இராசா குறிப்பிட்ட கருத்து பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், கீழடி தொல்லியல் ஆய்வு குறித்து இன்னும் அறிவியல்பூர்வமாக முடிவுகள் வரவேண்டி உள்ளன என்றும் அவை வந்தபின்னரே அதைப் பற்றி முடிவுசெய்யப்படும் என்றும் கூறினார். 

முன்னதாக, தமிழக அரசும் கீழடி முடிவுகளை மைய அரசு வேண்டுமென்றே காலம்தாழ்த்துவதாகக் குறைகூறியிருந்தது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com