கெபியே உடையில் சிபிஎம் தலைவர்கள்- பாலஸ்தீன இனக்கொலைக்கு எதிராகத் தீர்மானம்!

மதுரை சிபிஎம் மாநாட்டில் பாலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்து தீர்மானம்
மதுரை சிபிஎம் மாநாட்டில் பாலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்து தீர்மானம்
Published on

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் 24ஆவது காங்கிரசில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கடந்த 2ஆம் தேதி முதல் மதுரை, தமுக்கம் மைதானத்தில் சிபிஎம் கட்சியின் 24ஆவது காங்கிரஸ் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் வரைவு அரசியல் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு, ஆலோசனைகளுடன் நிறைவேற்றப்பட்டன.

முதல் தீர்மானத்தில், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மதுரை சிபிஎம் மாநாட்டில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி
மதுரை சிபிஎம் மாநாட்டில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி

அதையொட்டி, மாநாட்டுப் பிரதிநிதிகள் அனைவருக்கும் பாலஸ்தீனர்களின் உடையான கபியே வழங்கப்பட்டு, அணிந்துகொண்டனர். பாலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்குவதன் அடையாளமாக சிபிஎம் பிரதிநிதிகள் இவ்வாறு வெளிப்படுத்திக்கொண்டனர்.

சிபிஎம் மதுரை மாநாட்டில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. இராமகிருஷ்ணன்
சிபிஎம் மதுரை மாநாட்டில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. இராமகிருஷ்ணன்

தீர்மானத்தை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி முன்மொழிய, சக குழு உறுப்பினரான தமிழ்நாட்டின் ஜி.இராமகிருஷ்ணன் வழிமொழிந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com