சட்டப்பேரவை- பா.ஜ.க. வெளிநடப்புக்கு நயினார் சொன்ன காரணம்!

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on

சட்டப்பேரவையில் இன்று பா.ஜ.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதற்கு நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார்.

பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார், மாநிலத்துக்கு முழு அதிகாரம் வேண்டும்; சுயாட்சி வேண்டும் என முதலமைச்சர் இன்று 110ஆவது விதியின் கீழ் அறிக்கையை வாசித்தார்; மாநிலத்துக்கு முழு அதிகாரம் தரக்கூடாது என்பதுதான் பா.ஜ.க.வின் கருத்து; அதன் அடிப்படையில் வெளிநடப்பு செய்து, எங்கள் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறோம் என்றார்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மாநில சுயாட்சிக்கு எதிராக நடந்துகொள்கிறது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளதைப் பற்றிக் கேட்டதற்கு, நீட் தேர்வு காங்கிரஸ் மத்திய ஆட்சியில்தான் வந்தது; 2013ஆம் ஆண்டு மே 5ஆம் தேதியே வந்துவிட்டது; இதில் எந்தவகையில் பா.ஜ.க. மாநில சுயாட்சியைப் பறிக்கமுடியும் என்று நயினார் பதில்கேள்வி எழுப்பினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com