செய்திகள்
திருச்சியை மையமாகக் கொண்டு இயங்கும் சாட்டை வலைக்காட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று அக்கட்சியின் தலைவர் சீமான் திடீரெனக் கூறியிருக்கிறார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “ துரைமுருகன் நடத்தும் சாட்டை வலையொளிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதில் வெளியிடப்படும் கருத்துகள், செய்திகள் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்துகளே ஆகும்.” என்று விளக்கம் அளித்துள்ளார்.
அந்த வலைக்காட்சியின் கருத்துகளுக்கு நா.த.க. பொறுப்பேற்காது என்றும் சீமான் கூறியுள்ளார்.
தேடப்படும் சர்ச்சைக்குரிய சாமியார்ப் போலி நித்யானந்தாவின் பேட்டியை எடுத்துள்ளதால், சாட்டை யூட்டியூப் பற்றி சீமான் இப்படி விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.