சீமான் கட்சிக்கு மீண்டும் ஏர் உழவன் சின்னம்!

சீமான் கட்சிக்கு மீண்டும் ஏர் உழவன் சின்னம்!
Published on

இயக்குநரும் நடிகருமான சீமான் தலைமையிலான நா.த.கட்சிக்கு ஏர் கலப்பையுடன் கூடிய உழவன் சின்னம் முன்னர் சுயேச்சை சின்னமாக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இடையில் அக்கட்சிக்கு அந்தச் சின்னம் வழங்கப்படவில்லை.

ஒரே கட்சியின் வேட்பாளர்களாக இருந்தபோதும் ஒலிவாங்கி சின்னம் போல வேறு சின்னங்களில் போட்டியிட்டதால் கட்சியின் சின்னமாக எதையும் வைத்துக்கொள்ள முடியாமல் அக்கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர். 

கடந்த மக்களவைத் தேர்தலில் நா.த.க. பெற்ற வாக்குகள் அளவு காரணமாக அக்கட்சிக்கு மாநிலக் கட்சி அந்தஸ்து கிடைத்தது. 

அதையொட்டி பழையபடி அவர்கள் விரும்பிக் கேட்ட ஏர் கலப்பையுடன் கூடிய உழவன் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. 

இதற்கான தகவலை இன்று அக்கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com