தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் பாஸ்டேக் மூலம் வசூலிக்கப்படுகிறது. இதில் வரும் மே 1ஆம்தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு, செயற்கைக்கோள் முறை மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சுமார் 1,200 சுங்கச்சாவடிகள் மூலம் 7 கோடி பேர் பாஸ்டேக் முறையைப் பயன்படுத்திவரும் நிலையில், மே முதல் தேதியிலிருந்து செயற்கைக்கோள் மூலம் ஒவ்வொரு வாகனத்தையும் கண்காணித்து, அது கடக்கும் தொலைவின் அடிப்படையில் கட்டணம் தீர்மானிக்கப்படும் என்று புதிய தகவலில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், மே 1 முதல் குறிப்பிட்ட சாவடிகளில் மட்டும் ஆட்டோமேட்டிக் நம்பர்பிளேட் ரெக்கக்னைசன் எனப்படும் வாகன எண்பலகையை வைத்து தானாகவே கட்டணம் அளவிடும் பாஸ்டேக் முறையைக் கொண்டுவரவுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.