கோடை விடுமுறை, பக்ரீத் விடுமுறை, வார விடுமுறையைக் கழித்துவிட்டு சொந்த ஊர்களிலிருந்து ஏராளமானவர்கள் சென்னைக்குத் திரும்பிவருகின்றனர்.
நெரிசலில் சிக்காமல் தவிர்ப்பதற்காக, நேற்று காலையில் ஊரிலிருந்து புறப்பட்டவர்கள் மாலைவரை சென்னைக்குள் வருவதில் பெரிய சிரமம் எதுவும் இல்லை. மாலை 6.30 மணிக்கு மேல் கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தை ஒட்டியும் அதற்குத் தெற்கிலும் மதுராந்தகம், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் சாலைப் பணி செய்யப்படுவதால், வண்டிகள் நின்றுநின்று வரவேண்டி இருந்தது.
நேரம் ஆகஆக செங்கல்பட்டு முன்பிருந்தே வண்டிகள் மெதுவாகச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இது கிளம்பாக்கம், தாம்பரம்வரை நீடித்தது.
காலைவரை சென்னையை நோக்கிய சாலையில் நெரிசலும் வண்டிகளின் தேக்கமும் மற்ற வாகன ஓட்டிகளையும் அவதிக்கு உள்ளாக்கியது. நகரிலிருந்து அன்றாடம் வேலைக்குச் செல்பவர்களும் இதனால் காலையில் சிரமத்தை எதிர்நோக்கினர்.