செய்திகள்
சென்னை மருத்துவக் கல்லூரியின் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன், இன்று திடீரென அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே அந்தப் பொறுப்பில் இருந்துவரும் கே. சாந்தாராம், சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக மாற்றப்பட்டுள்ளார்.
நிர்வாகக் காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையின் செயலாளர் செந்தில்குமார் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.