காவல்துறையில் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவின் தலைமை இயக்குநர் - டிஜிபி சீமா அகர்வால் திடீரென மாற்றப்பட்டு, தீயணைப்பு- மீட்புப் படையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த இடம் காலியாகவே இருந்துவருகிறது.
சீமாவின் பொறுப்பை அதே துறையில் ஐ.ஜி.யாகப் பணியாற்றும் ரூபேஷ் குமார் கூடுதலாக கவனித்துக்கொள்வார்.
உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளார்.
பல ஐ.ஜி. நிலை அதிகாரிகளும் இடமாற்றம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் தடுப்பு- கண்காணிப்பு இணை இயக்குநர் சந்தோஷ்குமார், பொருளாதாரக் குற்றத் தடுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கிருக்கும் சத்தியப்பிரியா தலைமையக நலத்திட்டப் பணிகள் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விஜயேந்திர பிதாரி சென்னை மாநகரக் காவல்துறையின் தலைமையக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பதவியில் இருக்கும் கபில்குமார் சரத்கர் அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அந்த இடத்தில் பணியாற்றிவரும் ஜி. கார்த்திகேயன், சென்னை, மாநகர போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியிலிருந்த ஆர். சுதாகருக்குப் பதிலாக இவரின் நியமனம் இடம்பெற்றுள்ளது.