டிடிவி- ஓபிஎஸ் சந்திப்பு - எப்படிப் பார்க்கிறீர்கள்?- இதற்கு துரைமுருகன் பதில் என்ன தெரியுமா?

டிடிவி- ஓபிஎஸ் சந்திப்பு - எப்படிப் பார்க்கிறீர்கள்?- இதற்கு துரைமுருகன் பதில் என்ன தெரியுமா?

திமுக-வின் மூத்த தலைவர்களிலும் ஒருவரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் பத்திரிகையாளர்களுக்கு பதில் அளிக்கும் விதமே வித்தியாசமானது. முக்கியமான கேள்விகளுக்கு கலாய்க்கும் விதத்தில் பதில் அளிப்பார்.

அந்தவகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம், தமிழக அமைச்சரவை மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், அமைச்சரவையை மாற்றுவது முதல்வரின் உரிமை. அவர் யாரை வேண்டுமானாலும் மாற்றலாம். அமைச்சரவை மாற்றப்படுவது குறித்து நீங்கள் முதல்வரிடம் கேட்க வேண்டும். எனக்கு தெரியாது. உங்கள் யூகம் சரியாக இருக்கிறதா என்பதை நானும் பொறுத்திருந்து பார்க்கிறேன் என்றார்.

திராவிட மாடல் காலாவதியாகிவிட்டதாக ஆளுநர் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, திராவிட மாடல் காலாவதியாகவில்லை. ஆளுநரின் பேச்சு தான் காலாவதி ஆகிவிட்டது என்றார்.

முதல்வருடன் வெளிநாடு செல்கிறீர்களா? என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், முதல்வர் ஸ்டாலினுடன் நான் வெளிநாடு செல்லவில்லை என்றார்.

டிடிவி- ஓபிஎஸ் சந்திப்பு எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ”டிவியில் தான் பார்க்கிறேன்” என்றார். அவரின் இந்த பதில் பத்திரிகையாளர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

logo
Andhimazhai
www.andhimazhai.com