செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கோடை வெயிலுக்கு இடையிலும் மழை பெய்துவருகிறது. ஈரோடு மாவட்டத்தில் சில பகுதிகளில் நேற்று இரவு சூறைக்காற்றோடு மழை பெய்தது.
அம்மாபேட்டை பகுதியில் சூறைக்காற்றால் ஏராளமான வாழை மரங்கள் தாரோடு வீழ்ந்து நாசமாகின.
நன்றாகக் காய்ப்பு வைத்த நிலையில் தாரோடு தாராக வாழை மரங்கள் விழுந்து கிடந்ததைக் கண்டு விவசாயிகள் கண்ணீர்மல்க வேதனை தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு இழப்பீடாக மாவட்ட நிர்வாகம் நிவாரணம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.