தி.மு.க.வில் புதிதாக 2 அணிகள்- பொதுக் குழுவில் ஒப்புதல்!

தி.மு.க.வில் புதிதாக 2 அணிகள்- பொதுக் குழுவில் ஒப்புதல்!
Published on

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் நிலையில், தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெறுகிறது. 

தென் மாவட்டங்களைக் குறிவைத்து கவனம் ஈர்க்கும்வகையில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், முக்கியமான இரு முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 

கட்சியில் ஏற்கெனவே 23 சார்பு அணிகள் இருந்துவரும் நிலையில், கூடுதலாக மாற்றுத்திறனாளிகள் அணியும், ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்ட கல்வியாளர்கள் அணியும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்புதலை மதுரை பொதுக்குழு வழங்கியுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com