செய்திகள்
பா.ம.க.வின் பொருளாளர் பதவியிலிருந்து எழுத்தாளர் திலகபாமாவை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் இராமதாஸ் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டார். தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உச்சகட்ட குடும்பச் சண்டையின் தொடர்ச்சியாக, அந்த அறிவிப்புக்கு அன்புமணி பதிலடி கொடுத்துள்ளார்.
இராமதாசால் நீக்கப்பட்ட திலகபாமா பொருளாளர் பதவியில் தொடருவார் என்றும் அவர் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; அவருக்கு நிர்வாகிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அன்புமணி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.