செய்திகள்
மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்த முறை தே.மு.தி.க.வுக்கு இடம் வழங்கப்படவில்லை.
இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில், அ.தி.மு.க.வே இரண்டு இடங்களுக்கும் போட்டியிடுகிறது.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வழக்குரைஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு தனபால் ஆகியோர் அக்கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டணியில் தே.மு.தி.க. தொடர்வதாகவும் அடுத்த மாநிலங்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தி.மு.க. அணியில் அக்கட்சி 3 இடங்களிலும் கமலின் ம.நீ.ம. கட்சி ஓரிடத்திலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.