செய்திகள்
மலைப் பகுதியில் சாலையில் கார் ஒன்றின் மீது வானிலிருந்து வந்த ஹெலிகாப்டர் அப்படியே இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பயங்கர சத்தத்துடன் ஹெலிகாப்டர் திடீரெனத் தரையிறங்கிய இந்த சம்பவம், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக்கில் நடைபெற்றுள்ளது.
கேதர்நாத் சவாரி போய்விட்டுத் திரும்பியபோது ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாகத் தரையிறக்கப்பட்டதில் ஆறு பயணிகள் உயிர்தப்பினர்.
விமானிக்கு மட்டும் இலேசான காயம் ஏற்பட்டது.
ஹெலிகாப்டரின் இறக்கைப் பகுதி சேதமானது.