செய்திகள்
பாகிஸ்தானுடனான ஆயுத மோதல் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் முறைப்படி தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.
”இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு துப்பாக்கிச் சூடு, இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது என ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். ” என்று அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவைப் பொறுத்தவரை, பயங்கரவாதத்துக்கும் அதன் அனைத்து வெளிப்பாடுகளுக்கும் எதிராக சமரசமற்ற நிலையினை உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறது. இதில் இனியும் எந்த மாற்றமும் இருக்காது.” என்றும் வெளியுறவு அமைச்சர் உறுதிபடக் கூறியுள்ளார்.