செய்திகள்
பா.ம.க.வின் உட்கட்சிப் பிரச்னையின் அங்கமாக, பொருளாளர் பதவியில் இருந்துவரும் எழுத்தாளர் திலகபாமாவை மாற்றி, முன்னாள் பொருளாளர் சையத் மன்சூர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் நிறுவனர் இராமதாஸ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதை சையத் மன்சூர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதேசமயம், சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூட்டியுள்ள கூட்டத்தில் திலகபாமா கலந்துகொண்டுள்ளார்.
வழக்குரைஞர் கே. பாலு, பசுமைத் தாயகம் அருள் ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.