பாலியல்தொல்லை தந்த சுவாமிகள் கைது!

பாலியல்தொல்லை தந்த சுவாமிகள் கைது!
Published on

கோயிலுக்கு வந்த பெண் பக்தையிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சுவாமிகள் கைதுசெய்யப்பட்டார். 

தலைமறைவாக இருந்தவரை புதுச்சேரியில் வைத்து காவல்நிலையத்தினர் கைதுசெய்தனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ளது, நாகதாதசாமி கோயில். இங்கு தியாகராஜன் சுவாமிகள் அர்ச்சகராகப் பணியாற்றி வருகிறார். 

கோயில் பணி செய்துவந்தாலும் திரைப்பட நடிகரைப் போலவும் கையில் பெரும் பட்டையுடன் கடிகாரம் அணிந்துகொண்டு அலங்காரம் செய்துகொண்டு பிரமுகர்களைப் போல தோற்றம் தருவதில் இவருக்கு அலாதிப் பிரியம். 

இந்நிலையில் கோயிலுக்கு உழவாரப் பணி செய்ய வந்த பெண் பக்தரிடம் இவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் என்று புகார் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் காவல்நிலையத்தினர் அவரை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் தியாகராஜன் சுவாமிகள் தலைமறைவாகி தப்பியோடிவிட்டார். 

இதனால் அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதலில் அவர்கள் புதுச்சேரியில் அவரைப் பிடித்தனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com