தேசிய அளவிலான 25-க்கும் மேற்பட்ட சட்டப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு-கிளாட்டில், திருச்சியைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பச்சமலை, தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பரத் என்ற மாணவரே இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.
இவரின் தாயார் இறந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கடினமான சூழலிலும் நன்கு படித்து, முதலிடம் பிடித்துள்ளார்.
இவருக்கு தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திலேயே படிக்க இடம் கிடைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ உள்ளம் உவகையில் நிறைகிறது💕💕💕தம்பி பரத் அவர்கள் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்குத் தி.மு.க. சட்டத்துறையும் - அதன் செயலாளர் NRElango-DMK அவர்களும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.