செய்திகள்
பொள்ளாச்சியில் கடந்த ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க. நிர்வாகி உட்பட 9 பேர் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது மாநிலத்தையே அதிரவைத்தது.
இதில், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்தான் என்று கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பு அளித்துள்ளது.
பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையம் முதலிலும் பின்னர் சிபிசிஐடி காவல்துறைப் பிரிவும் பின்னர் சிபிஐயும் என இந்த வழக்கை விசாரித்தனர்.
மொத்தம் 48 பேர் சாட்சியம் அளித்தனர். ஒருவர்கூட இதில் பிறழ் சாட்சியமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பை அளித்த நீதிபதி நந்தினி தேவி மதியம் 12 மணிக்கு தண்டனை விவரங்களை அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.