செய்திகள்
தமிழ்நாட்டில் நாய்கள் கூட்டாக வந்து கடித்துக்குதறும் சம்பவங்கள் சில ஆண்டுகளாகத் தொடர்ந்துவருகின்றன. இடையில் இரு மாதங்களாகக் குறைந்திருந்த நாய்களின் தாக்குதல் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நாகொண்டபள்ளியில் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவனை நாய்கள் கடித்தன. இதில் படுகாயம் அடைந்த அவன் அலறித் துடித்தான.
அவனுடைய அலறலைக் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் சிறுவனை ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 10 தையல்களை இட்டு மருந்து கொடுத்துள்ளனர்.
மருத்துவக் கண்காணிப்பில் சிறுவன் வைக்கப்பட்டுள்ளான்.