விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 34 மதுக்கடைகளை நாளை மூடும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை 11ஆம் தேதியன்று சித்திரை முழுநிலவு நாளை முன்னிட்டு பா.ம.க. சார்பில் வன்னியர் இளைஞர் பெருவிழா எனும் பெயரில் மாநாடு கூட்டப்படுகிறது. இதற்குத் தடைவிதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனாலும் மாநாட்டுக்குத் தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்ததுடன், மண்டல காவல் துறையின் விதிகளைக் கடைப்பிடிக்குமாறு கண்டிப்புடன் கூறியது.
அதையடுத்து, மாநாடு உறுதியான நிலையில் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் காவல்துறையினர் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், குடித்துவிட்டு கலாட்டா, வன்முறைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும்வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 34 மதுக்கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் சேக் அப்துல் இரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
பக்கத்து மாநிலமான புதுச்சேரியிலும் மதியம் ஒரு மணியுடன் அனைத்து மதுக்கடைகள், உணவங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.