செய்திகள்
தமிழ்நாட்டு அரசின் வாணிபக் கழகம்- -டாஸ்மாக்கின் சார்பில் இந்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு 454 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தைப்பொங்கலின் முதல் நாளான போகிப் பண்டிகை (13ஆம் தேதி) அன்று ரூ.185.65 கோடி ரூபாய்க்கு அரசு மது விற்கப்பட்டுள்ளது.
மறுநாள் பொங்கல் (14ஆம் தேதி) அன்று 268.46 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் சார்பில் மது விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று திருவள்ளுவர் நாள் என்பதால் மதுக் கடைகள் விடுமுறையால் மூடப்பட்டிருந்தன.
முந்தைய இரண்டு நாள்களையும் சேர்த்து மொத்தம் 454.11 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மது விற்பனை ஆகியுள்ளது.
கடந்த ஆண்டும் 450 கோடி ரூபாய்க்கும் மேல் மது விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.