செய்திகள்
இதோ அதோ என இழுத்தடிக்கப்பட்ட மத்திய கல்வி வாரியம் - சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் ஒருவழியாக இன்று வெளியிடப்பட்டுள்ளன.
மொத்தம் 17,04,367 மாணவர்கள் தேர்வுக்குப் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 16,92,794 மட்டுமே தேர்வுகளை எழுதினர்.
14 இலட்சத்து 96ஆயிரத்து 307 பேர் அதாவது 88.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டைவிட தேர்ச்சி 0.41 சதவீதம் கூடுதல் ஆகும்.
மாணவன்களைவிட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 91.64 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், மாணவன்களில் 85.7 சதவீதம் பேரே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 5.94 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி வித்தியாசம் காணப்படுகிறது.
www.umang.gov.in எனும் இணையதளத்தில் மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.