அரசுக் கல்லூரிகளில் கௌரவப் பேராசிரியர்களாக ஆண்டுக்கணக்கில் பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கானவர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை. இதை வலியுறுத்தி இருபது ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடந்துவருகிறது.
ஆனால் அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. சில மாதங்களாக அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என அதிருப்தி நிலவிவருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் கௌரவ பேராசிரியர்கள் குவிந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே காவல்துறையினர் விரைந்துவந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பேராசிரியர்களை அவர்கள் விரட்டினர். மீறி போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டவர்களை, காவல்துறையினர் தள்ளிவிட்டும் குத்தியும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்தக் காட்சி தொலைக்காட்சி ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பாகியது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.