2 மாசம் கெடு... 30% இலக்கு- இலக்குவைத்த தி.மு.க. பொதுக்குழு!

2 மாசம் கெடு... 30% இலக்கு- இலக்குவைத்த தி.மு.க. பொதுக்குழு!
Published on

தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் மதுரை, உத்தங்குடியில் இன்று நடைபெற்றுவருகிறது. இதில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் புதிய உறுப்பினர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை புதிதாக உறுப்பினர்களாகச் சேர்க்கவேண்டும். 

அடுத்த இரண்டு மாதங்களில் இந்த இலக்கை முடிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மாவட்ட, பகுதி, நகர, ஒன்றிய, பேரூர், கிளை, வட்ட கட்சியமைப்புகளின் செயலாளர்கள் தங்களுக்கான இலக்கைச் செய்துமுடிக்க வேண்டும். 

தொகுதி பார்வையாளர்களும் மாவட்டச் செயலாளர்களும் இதை வெற்றிகரமாக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com