செய்திகள்
தி.மு.க. மாவட்டச்செயலாளர்களின் கூட்டத்துக்கு அக்கட்சித் தலைமை திடீரென அழைப்பு விடுத்துள்ளது.
நாளைமறுநாள் 7ஆம்தேதி காலை 10.30 மணிக்கு காணொலிக்க்காட்சி மூலம் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.