சிடி ரவி
சிடி ரவி

பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சிடி ரவி நீக்கம்!

பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக இருந்த சிடி ரவி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டசபைத் தேர்தல்கள், தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக இப்போதே தயாராகி வருகிறது.

இதற்கான தேர்தல் வியூகங்கள், கூட்டணி அமைப்பது தொடர்பான விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல் தேர்தலுக்கு ஏற்ப பாஜக உட்கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் படி தேர்தலை மனதில் வைத்து பாஜக தேசிய தலைமை பதவிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்து இருக்கிறது.

அதன்படி 13 பாஜக தேசிய துணைத் தலைவர்கள், 9 பாஜக பொதுச் செயலாளர்கள், 13 தேசிய செயலாளர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் கர்நாடகாவை சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவரும், பொறுப்பாளருமான பி.எல்.சந்தோஷ் கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்த சி.டி.ரவி அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அனில் ஆண்டனி, முன்னாள் ஏ.எம்.யூ துணைத் தலைவர் தாரிக் மன்சூர் ஆகியோர் பாஜகவின் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானா பாஜக முன்னாள் தலைவர் பண்டி சஞ்சய் குமார் தேசிய பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com