2ஆம் முறையாக சுற்றுவட்டப் பாதை உயர்த்தப்பட்ட ’ஆதித்யா எல்-1’
2ஆம் முறையாக சுற்றுவட்டப் பாதை உயர்த்தப்பட்ட ’ஆதித்யா எல்-1’

ஆதித்யா எல்-1 புவி சுற்றுப் பாதை 2ஆவது முறை உயர்த்தப்பட்டது!

சூரியப் புலத்தைப் பற்றி ஆய்வுசெய்ய இந்தியா அனுப்பியுள்ள ஆதித்யா எல்-1 விண்கலமத்தின் புவி சுற்றுவட்டப் பாதை, இன்று மீண்டும் உயர்த்தப்பட்டது.

கடந்த 2ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா விண்கலம் 125 நாள் பயணத்தை மேற்கொண்டு, இலாக்ராஞ்சியன் புள்ளி எல் 1 -ஐ அடையவேண்டும். அதற்கு முன்னர், பூமியைச் சுற்றி ஐந்து முறை வெவ்வேறு வட்டப்பாதைகளில் படிப்படியாக உயர்ந்துகொண்டே செல்லும்.

முதல் கட்டமாக, நேற்றுமுன்தினம்3ஆம் தேதியன்று முற்பகல் 11.40 மணியளவில் குறைந்தபட்சம் 245 கிமீ x அதிகபட்சம் 22,459 கிமீ உயரத்துக்கு ஆதித்யாவின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. 

இன்று அதிகாலை 2.45 மணிக்கு அதன் சுற்றுப்பாதை மீண்டும் அதிகரிக்கப்பட்டது. அதையடுத்து, இப்போது விண்கலமானது 282 கிமீ x 40,225 கிமீ என்ற சுற்றுவட்டப் பாதையில் சுழன்றுவருகிறது. 

சுற்றுப்பாதை மாற்றத்தை முன்னிட்டு மொரிசியஸ், போர்ட்பிளேர், பெங்களூருஆகிய இடங்களில் உள்ள இஸ்ரோதரைக்கட்டுப்பாட்டு மையங்கள், ஆதித்யாவின் நகர்வைக் கண்காணித்தபடி  இருந்தன.

பெங்களூரு தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் சுற்றுப்பாதை உயர்த்தம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அடுத்ததாக வரும் 10ஆம்தேதி காலைவிடியும் முன்னர் ஜாமம் 2 மணியளவில் மூன்றாவதாக சுற்றுவட்டப் பாதை உயர்த்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com