காங்கிரஸில் சேருங்கள்: மஜத தொண்டர்களுக்கு டி.கே.சிவக்குமார் அழைப்பு

காங்கிரஸில் சேருங்கள்: மஜத தொண்டர்களுக்கு டி.கே.சிவக்குமார் அழைப்பு

கர்நாடக காங்கிரஸ் தலைவரும், கனகபுரா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான டி.கே.சிவக்குமார், பாஜக அதிக செலவு செய்தாலும், பெரிய தலைவர்கள் பிரச்சாரம் செய்தாலும் தேர்தல் முடிவு காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். “பாஜக மக்கள் எவ்வளவு பணம் வாரி இறைத்திருந்தாலும், எந்த பெரிய தலைவர்கள் இங்கு பிரச்சாரம் செய்து உழைத்திருந்தாலும், வாக்குச் சீட்டு தோட்டாவை விட வலிமையானது” என்று சிவக்குமார் கூறினார். மேலும் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பில்லை என்றும், மதியம் 1 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

கூட்டணி ஆட்சிக்கு தயாராக இருப்பதாக ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி கூறியதற்கு பதிலளித்த காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார், குமாரசாமி என்ன சொன்னார் என்று தெரியவில்லை என்று கூறினார். குமாரசாமி தனது கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று முன்பு கூறியதாகவும், இது அவரது கட்சித் தொண்டர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக அவர் அப்படி தெரிவித்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், மஜத தொண்டர்கள் தங்கள் அரசியல் வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம்” என்றும் அதற்கு பதிலாக காங்கிரஸில் சேருமாறும் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com