இராகுல்காந்தி
இராகுல்காந்தி

கூட்டணிக் கட்சிகளுடன் நாளை பேசி முடிவு- ராகுல் தகவல்

இந்தியா கூட்டணியின் கட்சிகளுடன் நாளை ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருடன் இராகுல் காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அரசமைப்புச் சட்டத்தைக் காப்பதற்காக நாங்கள் போராடினோம். மோடி தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். குறிப்பாக, உத்தரப்பிரதேசத்து மக்கள் எங்களின் போராட்டத்தின் நியாயத்தை நன்கு புரிந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி.” என்று கூறினார்.

ஆட்சியமைப்பதில் இந்தியா கூட்டணி ஈடுபடுமா எனக் கேட்டதற்கு, “ நாங்கள் கூட்டணிக் கட்சிகளை மதிக்கிறோம். நாளை கூட்டணித் தலைவர்களுடன் பேசி இதுகுறித்து முடிவுசெய்வோம்.” என்று இராகுல் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com