தெலங்கானா முதலமைச்சர் பதவியேற்பு விழா நாளை நடக்கவும் வாய்ப்பு உண்டு எனும் நிலையில், அந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி டிஜிபியுடன் பேசினார்.
இந்நிலையில், இன்று மாலையே நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்பதால் நாளையே பதவியேற்பை வைத்துக்கொள்ளலாம் என்றும் பதவியேற்பு விழாவை வரும் 9ஆம் தேதி வைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெலங்கானா டிஜிபி அஞ்சனிகுமாரிடம் தெரிவித்தார் என்று காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்பி மைதானத்தில் பதவியேற்பு விழாவை நடத்தவும் அதில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், டெல்லி தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்களைக் கலந்துகொள்ளச் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், டிஜிபி அஞ்சனிகுமார், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐதராபாத் காவல்ஆணையர், மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அண்மைச்செய்தியாக...
காங்கிரஸ் கட்சியின் சார்பில் கர்நாடகத் துணைமுதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர் இரவு 9.30மணியளவில் ஆளுநரைச் சந்தித்து நாளை தங்களின் சட்டமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் 65 பேர் முதலமைச்சரை உறுதிசெய்வார்கள் என்றும் தெரிவித்தார்.